Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு ஹெளட்டாவிலிருந்து வெளியேறும் மக்கள்

In உலகம்
Updated: 04:05 GMT, Mar 14, 2018 | Published: 04:05 GMT, Mar 14, 2018 |
0 Comments
1200
This post was written by : Elakkiya

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் கிழக்கு ஹெளட்டா பகுதியிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 146 பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் காயமடைந்தவர்களும், குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தற்காலிக தங்குமிடங்களுக்கு வந்து சேர்ந்துள்ள மொத்தம் 21 சிறுவர்களுக்கு போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சிரியாவின் உத்தியோகபூர்வ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு டமாஸ்கஸின் வடகிழக்கு பகுதியின் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள Wafidin மற்றும் கிளர்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுன்ன டியூமா பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான பாதை வழியாக Wafidin பகுதிக்குச் செல்கின்றனர்.

ஐ.நா. அதிகாரிகளின் தகவல்களின் பிரகாரம், நேற்று (செவ்வாய்க்கிழமை) கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் இரண்டு தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர்களில் சிலர் டமாஸ்கஸில் உள்ள தமது உறவினர்களுடன் சேர்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் கிழக்கு ஹெளட்டாவிலுள்ள ஏனையோரை விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறு ஐ.நா. அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிழக்கு ஹெளட்டாவில் ரஷ்ய ஆதரவிலான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினமே அதிகளவான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக அனைவரும் வெளியேற்றப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பல நகரங்களைக் கொண்ட 150 சதுர கிலோ மீற்றர் வேளாண்மைப் பகுதியான கிழக்கு ஹெளட்டா டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சுற்றுப்புறங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி கிளர்ச்சியாளர்களில் தாக்குதல்கள் இடம்பெறுவது வழக்கமாகியுள்ளது. இப்பகுதியில் நான்கு கிளர்ச்சிக் குழுக்கள் நிலைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg