Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச பாடசாலைகளின் நிகழ்வு

In இலங்கை
Updated: 10:47 GMT, Mar 14, 2018 | Published: 07:35 GMT, Mar 14, 2018 |
0 Comments
1098
This post was written by : poovannan

அகில இலங்கை ரீதியில் சர்வதேச பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட இணைப்பாடவிதான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு கொழும்பு பிஸப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

18ஆவது வருடமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்நிகழ்வை, இலங்கை சர்வதேச பாடசாலைகளின் ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வைரம், மரகதம், தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாகவும் கல்வி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் எஸ்.முரளிதரன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg