Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் – ஜனாதிபதி

In இலங்கை
Updated: 15:42 GMT, Mar 18, 2018 | Published: 15:42 GMT, Mar 18, 2018 |
0 Comments
1159
This post was written by : Litharsan

மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகள் மற்றும் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஆளுநர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, “பண்புமிக்கதும் உயர் பெறுமதியுள்ளதுமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகளாலும் செயற்பாடுகளாலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டும்.

கால அட்டவணைக்கேற்ப மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும்.

அத்தோடு பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஊழல் மோசடியற்று செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg