Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவின் சொந்த மண்ணில் சாதிக்குமா அவுஸ்ரேலியா?

In கிாிக்கட்
Updated: 08:06 GMT, Mar 21, 2018 | Published: 08:06 GMT, Mar 21, 2018 |
0 Comments
1089
This post was written by : Puvanes

தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவதும் முக்கியமானதுமான டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது.

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா 118 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியாவிற்கு பதிலடிகொடுத்த தென்னாபிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ள தொடரில் முக்கியமான போட்டியாக மூன்றாவது போட்டி அமைந்துள்ளமையினால் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்ரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இந்தப் போட்டியில் விளையாடுவதில் சந்தேக நிலை நிலவுவதோடு, தென்னாபிரிக்காவின் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்த ரபாடா மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg