Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

In இலங்கை
Updated: 16:19 GMT, Mar 21, 2018 | Published: 15:43 GMT, Mar 21, 2018 |
0 Comments
1068
This post was written by : Ravivarman

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

தியாகி திலீபனின் நினைவுத்தூபி முன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் குலேந்திரனின் புதல்வியான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குலேந்திரன் பிருந்தா ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுக் கல்லறைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் மலர்மாலை அணிவித்தார். அதன்போது மாமனிதர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து தேசிய அமைப்பளர் வி.மணிவண்ணன் முன்னிலையில் சத்திய இலட்சியத்துக்காக தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட உறவுகளையும் அவர்களின் தியாகங்களையும் நெஞ்சங்களிலே சுமந்து உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg