Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் பலர் விடுவிப்பு

In உலகம்
Updated: 05:11 GMT, Mar 22, 2018 | Published: 05:11 GMT, Mar 22, 2018 |
0 Comments
1157
This post was written by : Suganthini

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகளில், பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட  இம்மாணவிகள் Maiduguri பகுதியிலிருந்து தலைநகர் அபுஜாவை நேற்று (புதன்கிழமை) வந்தடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நைஜீரியாவின் டப்ஸி நகரில் பாடசாலை மாணவிகளும் ஆசிரியர்களும் தங்கியிருந்த விடுதியொன்றின் மீது போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினர் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி தாக்குதல் நடத்தியபோது, விடுதியிலிருந்த மாணவிகள் காணாமல் போன நிலையில், 110 பேர் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இம்மாணவிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துவந்த நிலையில், மேற்படி மாணவிகளில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தம்முடன் இருந்த சில மாணவிகள் உயிரிழந்ததுடன், ஒருவர் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்பட்ட மாணவிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg