Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர் நெருக்கடி: உதவிப்பொருட்களின்றி சிரமம்

In உலகம்
Updated: 07:28 GMT, Mar 23, 2018 | Published: 07:28 GMT, Mar 23, 2018 |
0 Comments
1101
This post was written by : Suganthini

தாம்  உதவிப்பொருட்களுக்கான பற்றாக்குறையை எதிர்நோக்குவதுடன், மியன்மார் எல்லைப்பகுதி காவலர்களின் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கி வருவதாக, பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் அகதி முகாமிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பங்களாதேஷில் பருவமழை பெய்துவரும் நிலையில், முகாமிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், கடுமையான மழை மற்றும் சூறாவளித் தாக்கத்திலிருந்து இந்த அகதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், குடுபாலங் (Kutupalong) பகுதியில் பிறிதொரு முகாம் அமைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் உதவி முகவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், சில வேளைகளில் குடிநீரைக் கூட பெற்றுக்கொள்ள நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ரோஹிங்கியா அகதிகள், மியன்மார் எல்லைக் காவலர்கள் தம்மைத் தொடர்ந்து சிரமத்துக்கு உள்ளாக்குவதுடன், இரவுவேளைகளில் தமது முகாம்களுக்கு கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்துவதாகவும், கூறியுள்ளனர்.

இதேவேளை, பங்களாதேஷில் எதிர்வரும் ஜுன் முதல் ஓகஸ்ட்வரை கனமழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முகாமிலுள்ள ரோஹிங்கியா அகதிகளின் நிலைமை மோசமடையும் நிலைமை காணப்படுவதாக, பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்திக்குழு தெரிவித்துள்ளது.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறையைத் தொடர்ந்து, ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் 7 லட்சம் பேர் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg