Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேடையிலிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட அமெரிக்க எழுத்தாளர்!

In
Updated: 08:16 GMT, Apr 13, 2018 | Published: 08:16 GMT, Apr 13, 2018 |
0 Comments
1210
This post was written by : Varshini

அமெரிக்க எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லீ விட்னூம், புறூக்ஃவீல்ட் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மன்ற கூட்டத்திலிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதிகாரிகளால் இவ்வாறு இழுத்துச் செல்லப்படும் காட்சி, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், ‘நான், அறிவிக்கப்பட்ட ஜனநாயக வேட்பாளராக இருக்கிறேன். இங்கு இருப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது’ என்று லீ விட்னூம் சத்தமிடுவது பதிவாகியுள்ளது.

இவ்வாறு சத்தமிட்டமாறு தரையில் விழுந்து கிடக்கும் அவரை அதிகாரிகள் இழுத்துச் செல்கின்றனர்.

குறித்த கூட்டத்துக்கு லீ விட்னூமுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் அழைப்பில்லாமலே கலந்து கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லீ விட்னூம் இஸ்ரேலின் ஒரு வெளிப்படையான விமர்சகர் ஆவார். 2010ஆம் ஆண்டு கனெக்சிகட் அமெரிக்க செனட் போட்டியில் அவருடைய கருத்துக்கள் வெகுவாக பாராட்டப்பட்டன.

வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் ஒரு வழியாக சட்டவிரோத மற்றும் சட்டபூர்வ ‘வெள்ளை கொலர்’ குடியேற்றத்திற்கு எதிரான கடினமான நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg