Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை!

In இலங்கை
Updated: 04:12 GMT, Apr 16, 2018 | Published: 03:22 GMT, Apr 16, 2018 |
0 Comments
1082
This post was written by : Anojkiyan

வவுனியா, புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் மிகவும் பெரிதாகவும் தமிழ், ஆங்கில மொழிகளில் மிகவும் சிறிதாகவும் காணப்படுவது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

90 சதவீத தமிழ் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் தமிழ் மொழியையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளதுடன். இல்லாவிட்டால் 3 மொழிகளையுமே ஒரே அளவில் பொறித்திருக்கலாம் எனவும் பொது அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரச கரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் பட்சத்தில் பெரும்பான்மையாக தமிழர் வாழ்கின்ற பகுதியிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுவது இன நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் கேடு விளைவிப்பதாகவே அமையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் முகமாக, அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)