Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

In இலங்கை
Updated: 05:20 GMT, Apr 17, 2018 | Published: 04:00 GMT, Apr 17, 2018 |
0 Comments
1083
This post was written by : poovannan

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதேச சபை செயலாளர் க.பேரின்பராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோரது முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாகமணி கதிரவேல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிட்டு 955 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். அத்துடன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வின் போது தவிசாளருக்காகப் போட்டியிட்டு 18 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

இப்பிரதேச சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 8 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் 8 பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 7 பேரும் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 4 பேரும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் 2 பேரும் ஐக்கிய சமாதான கூட்மைப்பு சார்பில் ஒருவரும் ஜனநாயக தேசிய இயக்கம் சார்பில் ஒருவரும் தெரிவாகியிருந்தனர்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்விற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான எஸ்.எம்.முகமது ஜௌபர் மற்றும் வனேந்திரன் சுரேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் முத்துப்பிள்ளை முரளிதரன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg