Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புறா மூலம் தகல் பரிமாறும் ஒடிசா பொலிஸ் நிலையங்கள்

In
Updated: 11:13 GMT, Apr 17, 2018 | Published: 11:13 GMT, Apr 17, 2018 |
0 Comments
1026
This post was written by : Kemasiya

ஒடிசாவில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குள் புறா மூலம் தூது அனுப்பப்படுவது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

தகவல் பரிமாற்றம் உலக அளவில் அதியுச்ச வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியா தொழில் நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் ஒரு மாநிலமான ஒடிசாவில், புறா மூலம் பொலிஸ் நிலையங்களுக்குள் தகவல் பரிமாறப்படும் விடயம் அனைவரும் அதிசயித்து பார்க்கும் அளவிற்குள்ளது.

இங்கு பொலிஸ் அதிகாரிகள் ஒரு பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்னொரு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்ப வேண்டுமாயின், புறாக்களின் கால்களில் தகவல் எழுதிய தாளை கட்டி பறக்க விடுகிறார்கள்.

குறித்த புறா அத்தகவலை சரியான பொலிஸ் நிலையத்தை நோக்கி கொண்டு உரியவர் கைகளில் ஒப்படைக்கிறது. இந்த சம்பவம் பார்ப்பவர்களுக்கு பழமைகளை நம்ப வைப்பதாகவும், புதுமையில் ஒரு பழமை காண்பது அதிசயிக்க வைப்பாகவும் உள்ளது.

புறா மூலம் தூதுவிடும் பழக்கம், ஒடிசா மாநிலத்தில் 1946ஆம் ஆண்டு முதல் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொலிஸ் நிலையத்தில் 200க்கும் மேற்ப்பட்ட புறாக்கள் தூதுக்காக வளர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)