Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவன்காட் செயல்பாட்டு மேலாளர் கைது!

In இலங்கை
Updated: 08:42 GMT, Apr 26, 2018 | Published: 08:42 GMT, Apr 26, 2018 |
0 Comments
1057
This post was written by : Risha

அவன்காட் ஆயுதக் களஞ்சியக் கப்பலின் செயல்பாட்டு மேலாளராக செயற்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை லெப்தினன் கப்டன் நிலுபுல் கொஸ்தா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்பிணை கோரிய இவர் தாக்கல் செய்திருந்த மனு, காலி நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் நிஷாந்த பீரிஸினால் மறுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவன்காட் நிறுவனத்திற்கு அனுமதியளித்ததன் மூலம் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய சாலையை செயற்படுவதற்கு இடமளித்தமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg