Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுஜன பெரமுனவிற்குத் தாவும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

In இலங்கை
Updated: 18:12 GMT, May 5, 2018 | Published: 15:57 GMT, May 5, 2018 |
0 Comments
1551
This post was written by : Jeyachandran Vithushan

பதவி விலக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உட்பட 16 பேரும், காலி சமணலை விளையாட்டு அரங்கில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கும் மே தின பேரணியில் இணைந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அவர்கள் பிற்காலத்தில் தங்களுடன் இணைந்து செயற்படவும் முடிவு செய்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த அரசாங்கத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவு, வரிச்சுமையும், பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றது என பார்த்தால், மறு புறத்தில் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

அண்மையில் தேசிய மர கூட்டுத்தப்பணத்தின் தலைவர் 2 கோடி ரூபாவினை இலஞ்சமாக பெற்றமை அதற்கு சான்று என டிலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றமானது அரசாங்கத்தின் மீது பல சந்தேகங்கள் எழச்செய்கின்றது என அமுனுகம மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg