Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்

In
Updated: 05:35 GMT, May 7, 2018 | Published: 05:35 GMT, May 7, 2018 |
0 Comments
1205
This post was written by : Suganthini

வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரு சிறுவர்களினதும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு லண்டனின் ஹரோ, Wealdstone பகுதியில் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய சிறுவன் காயமடைந்துள்ளான்.

இந்நிலையில், அதே பகுதியில் சுமார் 2 நிமிடங்களின் பின்னர் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டில் 13 வயதுடைய சிறுவன் காயமடைந்துள்ளான்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg