Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது: பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 04:55 GMT, May 11, 2018 | Published: 04:55 GMT, May 11, 2018 |
0 Comments
1093
This post was written by : Ravivarman

காங்கிரஸ் கட்சியினரின் இதயத்தில் தலித்களுக்கு இடமே இல்லை எனவும், அவர்கள் அம்பேத்கரை அவமதிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில் ‘நமோ’ செயலி மூலம் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியினரின் இதயத்தில் தலித்களுக்கு இடமே இல்லை. இது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கரை காங்கிரஸ் மதிப்பதில்லை.

அவரை அவமதித்தது. 1952-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலிலும் அம்பேத்கரை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் செய்தது.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. வாஜ்பாய் பிரதமரான பிறகுதான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்கியது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க.வினர் அதிக அளவில் உள்ளனர்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் இதை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்குகிறது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg