Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள் – சித்தராமையா கோரிக்கை

In இந்தியா
Updated: 10:42 GMT, May 13, 2018 | Published: 10:41 GMT, May 13, 2018 |
0 Comments
1047
This post was written by : Litharsan

கர்நாடக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் கருத்துக் கணிப்புகள் வெறும் 2 நாள் கேளிக்கையே எனவும், அதனை நம்பி மகிழ்ச்சியை இழந்திடாமல் விடுமுறையைக் கொண்டாடுங்கள் எனவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்தினூடாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கர்நாடக தேர்தலுக்கு பிறகு வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 2 நாள் கேளிக்கையே. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையுடன் காங்கிரஸே வெற்றி பெறும்.

தேர்தலுக்கு பின்னால் வெளியாகும் தகவல்கள் அனைத்துமே ஆறடி உயரம் கொண்ட ஒருவர் நான்கடி ஆழம் கொண்ட ஆற்றில் நடந்து அக்கரைக்கு போக முடியாமல் திண்டாடுவதைப் போன்றதாகும்.

எனவே, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரும் இந்த கருத்து கணிப்புகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உற்சாகமாக உங்கள் வார இறுதி விடுமுறையை கொண்டாடுங்கள்” என்று தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் தொங்கு சபையே உருவாகும் நிலையுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு அமையுமாயின் ம.ஜ.த. தலைவர் குமாரசாமிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோன்றுமென கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதனைவிட ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுமீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)