Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண் உயிரிழந்தமை தொடர்பில் போராட்டம்: வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு

In இலங்கை
Updated: 18:11 GMT, May 16, 2018 | Published: 18:11 GMT, May 16, 2018 |
0 Comments
1299
This post was written by : Litharsan

மட்டக்களப்பு கல்முனை வைத்தியசாலையில் 25 வயது பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வைத்திசாலை வட்டாரங்களில் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குழந்தைப் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட போது, உறவினர்களின் அனுமதியின்றி மேலதிக சிகிச்சை முறைகளைப் பின்பற்றியதால் உயிரிழப்பு நேர்ந்ததாகக் கூறியே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாயின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடனேயே சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)