Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்குமா பெங்களூர்?

In
Updated: 10:10 GMT, May 17, 2018 | Published: 10:10 GMT, May 17, 2018 |
0 Comments
1054
This post was written by : Litharsan

நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளில் இன்று (வியாழக்கிழமை) சன்றைசர்ஸ் அணிக்கும் பெங்களூர் அணிக்குமிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி களமிறங்கவுள்ளது. அதனைவிட அதிக வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டிய தேவையும் பெங்களூர் அணிக்கு உள்ளது.

புள்ளிகளின் பட்டியலில் பெங்களூர் அணி 5 வெற்றிகள், 7 தோல்விகளென 10 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி ‘பிளே ஓப்’ சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கமுடியும். தோல்வி அடைந்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

ஏற்கனவே சன்றைசர்ஸ் அணியிடம் பெங்களூர் அணி முதல் போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் சொந்த மண்ணில் விளையாடுவதால் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளது பெங்களூர் அணி. அணித்தலைவர் விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், உமேஷ் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

அதேவேளை புள்ளிகளின் பட்டியலில் சன்றைசர்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன் ஏற்கனவே ‘பிளே ஓப்’ சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

எனவே சன்றைசர்ஸ் அணிக்கு இது முக்கிய போட்டியாக அமையாத போதும் 10 ஆவது வெற்றியைப் பெறுவதில் ஆர்வத்திலுள்ளது. அத்துடன் ஐ.பி.எல். இல் வாய்ப்பளிக்காத வீரர்களுக்கு இப்போட்டியில் சந்தர்ப்பம் வழங்கவும் வாய்ப்புள்ளது.

எனவே இன்று நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூர் அணி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg