Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைப்பழத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட கொக்கைன் 

In ஐரோப்பா
Updated: 11:23 GMT, May 17, 2018 | Published: 11:22 GMT, May 17, 2018 |
0 Comments
1050
This post was written by : Johnson paiva

ஜேர்மனி பவரியாவின் பல்பொருள் அங்காடிகளில் வாழைப்பழங்களுக்குள் மறைத்து விற்கப்படும் கொக்கைன் வியாபாரம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொக்கைன் ஈக்வடோரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த விடயம் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 950 கிலோ எடையுள்ள கொக்கைன் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாழைப்பழம் பழுக்கவைக்கும் நிலையங்களில் இருந்தே கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஒவ்வொரு கிலோவாக வாழைப்பழப் பொதிகளில் மறைக்கப்பட்டிருந்ததாகவும் பவரியாவின் போதை மருந்து தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ஜோர்ஜ் பெய்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனி முழுவதுமுள்ள வாழைப்பழம் பழுக்கவைக்கும் நிலையங்களில் இருந்து இவை ஐரோப்பாவின் humburg எனும் இடத்திற்கு அனுப்பப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொக்கைன் கடத்தல் சம்மந்தமாக கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி 12 அல்பேனியர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)