Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் முப்படையினரும் தயார் நிலையில்!

In இலங்கை
Updated: 06:49 GMT, May 18, 2018 | Published: 06:49 GMT, May 18, 2018 |
0 Comments
1822
This post was written by : Vithushagan

அசாதாரண காலநிலையை எதிர் கொள்வதற்கு முப்படையினரும் தயாராக இருப்பதாக  இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழைபெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்பொழுது பெய்துவரும் மழையின் காரணமாக பல நீhத்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த பிரசேதங்களில் உள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில்  குறிப்பிடுகையில், இன்று காலை சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை தணிந்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இருப்பினும் தற்பொழுது உடவளவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கபட்டன. விசேடமாக நீர்பாசன பிரதேசங்களின் தாழ்நிலங்களில் வாழும் பொதுமக்களுக்கு இதுதொடர்பாக அடிக்கடி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைகளை பின்பற்றுமாறு நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் . திடீரென அதிகரிக்கக்ககூடிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார். திடீர் அனர்த்தத்தின் போது முப்படையினரை போன்று பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவு முப்படை பொலிஸார் மற்றும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த படையினர் கடற்றொழில் துறையினருக்கும் அடிக்கடி தெளிவுபடுத்தப்பட்டது. ஏற்படக்கூடிய திடீர் அனத்தம் குறித்தே இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாதகமான காலநிலை நிலவக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்தும் நாம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டுவருகின்றோம். இதனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் நாம் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யக்கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)