Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு!

In இலங்கை
Updated: 13:40 GMT, May 25, 2018 | Published: 13:50 GMT, May 25, 2018 |
0 Comments
1056
This post was written by : Ravivarman

தேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட மறுப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தேசிய சிங்கள செய்திப் பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசுரிக்கப்பட்டுள்ள சில செய்திகள் குறித்தே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்’ மற்றும் ‘நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்’ எனும் தலைப்புகளில் குறித்த செய்திகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த செய்தி அறிக்கைக்கேற்ப, அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களே அந்த செய்தி அறிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளன.

எனினும் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது மக்களின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு சபைக்கு தகவல்களேதும் கிடைத்திராத பின்னணியில் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான எதுவித அவசியமும் ஏற்படவில்லை.

எனவே இச்செய்தி, யாரேனுமொரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு பொய்யான செய்தியாகும்.

இத்தகைய பொய்யான செய்தியை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தவர் யார் என்பது பற்றிய துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களினால் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது’ எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg