Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இசை மழையுடன் கோலாகலமாக ஆரம்பமான ஃபிபா உலகக் கிண்ணம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:49 GMT, Jun 15, 2018 | Published: 04:49 GMT, Jun 15, 2018 |
0 Comments
1046
This post was written by : Varshini

சர்வதேசமே ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருந்த 21வது உலகக்கிண்ண காற்பந்து தொடர் ரஷ்யாவில் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இரவு ஆரம்பமாக இத்தொடரின் முதல் போட்டியில் சவூதி அரேபிய அணியை துவம்சம் செய்த ரஷ்ய அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் பிரபல பொப்பிசைப் பாடகர் ரஃபி வில்லியம்ஸ் இசை மழையில் அனைவரையும் நனைத்தார். பிரேஸில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை ஆரம்பித்து வைக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.

மிகவும் கோலாகலமாக ஆரம்பமான முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா, சவூதி அரேபியாவை துவம்சம் செய்துள்ளது.

5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ரஷ்யா, குழு யுவில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இப்போட்டியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சவுதி அரேபியா இளவரசர் மொஹமது பின் சல்மான், ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபின்டீனோ (Gianni Infantino)  உட்பட பலர் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

போட்டி ஆரம்பமாகி 12ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணி முதல் கோலைப் பெற்றது. அந்த அணியின் கசின்ஸ்கீ முதல் கோலை அடித்தார். அதைத்தொடர்ந்து 43வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடிக்க, முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷ்யா 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் டிசியூபா கோல் அடித்தார். மேலதிக நேர பரபரப்பான ஆட்டத்தில் டென்னிஸ் செரிஷேவ் மீண்டும் இரண்டாவது கோலை அடிக்க, கோலோவின் ஐந்தாவது கோலையும் அடித்தார்.

ரஷ்ய அணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத சவூதி அரேபியா இறுதி வரை போராடியும் ஒரு கோலையேனும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இந்த வெற்றியுடன் ரஷ்ய அணி 3 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியில் ரஷ்யா அணியே வெல்லுமென ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்திருந்தது. தற்போது அந்த பூனையின் ஆரூடம் பலித்துவிட்டதாகவும், அதன் கணிப்பு சாரியாக இருக்கும் என்றும் காற்பந்து இரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இன்று நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து – உருகுவே அணியையும், மொராக்கோ – ஈரான் அணியையும், போர்த்துக்கல் – ஸ்பெயின் அணியையும் எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)