Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

In இந்தியா
Updated: 07:16 GMT, Jun 25, 2018 | Published: 07:16 GMT, Jun 25, 2018 |
0 Comments
1091
This post was written by : Kemasiya

காஷ்மீரில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், இரண்டு பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சரணடைந்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், பாகிஸ்தானை தளமாக கொண்ட, லக்ஷர்-இ-தொய்தா அமைப்பின் படைத் தளபதி மற்றும் ஷகூர் தார் என்னும் போராளியாகும்.

அத்துடன் மேலும்மொரு போராளி, துப்பாக்கியை மேலே உயர்த்தியவாறு இந்திய படையிடம் சரணடைந்துள்ளார்.

அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பிரவினைவாத அமைப்புகளினால் முன்னெடுக்கப்படும் உரிமை கோரும் போராட்டம் நீண்ட காலமாக தொடர்கிறது.

இந்நிலையில், தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அவ்வப்போது பொதுமக்களும் உயிரிழக்க நேரிடுவதாகவும், அமைதியின்மை மாநிலத்தில் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தீவிரவாதிகளை போன்றே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தானியப் படைகள் அவ்வப்போது இந்தியாவின் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்துவது வழமையாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg