Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜுவண்டஸ் கால்பந்து கழக அணியில் இணைந்தார் ரொனால்டோ!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:53 GMT, Jul 11, 2018 | Published: 06:53 GMT, Jul 11, 2018 |
0 Comments
1789
This post was written by : Varshini

கால்பந்து அரங்கில் புகழ் பூத்த வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கால்பந்து கழக அணியான ரியல் மெட்ரிட் அணியிலிருந்து விலகி இத்தாலியின் முன்னணி அணியான ஜுவண்டஸ் கால்பந்து கழக அணியில் இணைந்துள்ளார்.

33 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து ஸ்பெயினின் பிரபல கால்பந்து கழக அணியான ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த வருடம் ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற பின்னர் ரொனால்டோ, ரியல் மெட்ரிட் அணியிலிருந்து விலகுவதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்தோடு இரு அணிகளுக்குமிடையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ரொனால்டோ, அணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த இரு கழகங்களுக்கும் இடையில் 112 மில்லியன் யூரோ பெறுமதியான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில், ரொனால்டோ இத்தாலியின் ஜுவண்டஸ் அணியுடன் நான்கு ஆண்டுகள் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான்காவது மிக விலை உயர்ந்த வீரர் என்ற பெருமையுடன் ஜுவண்டஸ் கழகத்தில் ரொனால்டோ இணைந்துள்ளார்.

பல வெற்றிகளுக்கு துணை நின்ற ரொனால்டோ, ரியல் மெட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்களை அடித்துள்ளார். ஒன்பது ஆண்டுகள் ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடிய 33 வயதுடைய ரொனால்டோ, ரியல் மெட்ரிட் அணி, நான்கு சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வெல்வதற்கு துணை நின்றவர் ஆவார்.

ஐந்து முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ, கடந்த 2008ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து அப்போதைய மிகப்பெரிய தொகையான 106 மில்லியன் டொலர்களுக்கு ரியல் மெட்ரிட் அணியில் ஒப்பந்தமானார்.

அன்று தொடக்கம் அவர் ஸ்பெயின் கழகத்திற்காக அனைத்து போட்டிகளிலும் 451 கோல்களுடன் அதிக கோல்கள் பெற்றவராக பதிவானதோடு, இரண்டு லா லிகா பட்டங்கள் மற்றும் நான்கு சம்பியன்ஸ் லீக் பட்டங்களை அந்த கழகத்திற்காக வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக்கில் கடந்த ஆறு பருவங்களில் அதிக கோல் பெற்றவராக இருந்து வருபவரும், நடப்பு பல்லோன் டிஓர் வெற்றியாளருமான ரொனால்டோவை தன்னகப்படுத்திக் கொண்டிருப்பது இத்தாலி கழகத்தின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஜுவண்டஸ் அணி கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இத்தாலியின் பலம்மிக்க கழகமாக இருந்து வருகின்றபோதும் 1996ஆம் ஆண்டு தொடக்கம் அந்த அணியால் ஐரோப்பாவின் உயரிய பட்டத்தை வெல்ல முடியவில்லை. இதன்படி ஸ்பெயினின் பிரதான தொடரான லா லிகா, நெய்மரை அடுத்து இரண்டாவது உலக நட்சத்திர வீரரையும் இழந்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் பெற்றவரான ரொனால்டோவுக்கு விடைகொடுக்கும் வகையில் ரியல் மெட்ரிட், தனது இணையதளத்தில் ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில், போர்த்துக்கல் அணியை வெளியேற்று சுற்று வரை அழைத்துச் சென்ற ரொனால்டோ, அணிக்காக 4 கோல்களை பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)