Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

குடியேற்றவாசிகள் உயிரிழந்த விவகாரம்: மூவருக்கு சிறைத் தண்டனை

In ஐரோப்பா
Published: 08:13 GMT, Aug 12, 2017 |
0 Comments
1099
This post was written by : Sylviya

மத்தியதரைக்கடலில் வரும் போது மூழ்கி உயிரிழந்த 13 குடியேற்றவாசிகள் தொடர்பில், ஜேர்மனிய நீதிமன்றத்தால் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் துருக்கியில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற்றவாசிகளை கடத்திச் செல்வதை தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்டவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு மற்றைய இருவருக்கும் முறையே இரண்டரை மற்றும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் குடியேற்றவாசிகளாகவே  ஜேர்மனிக்குள் புகுந்துள்ளனர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)