அல்பேர்ட்டா மாகாணசபை தேர்தல் : ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை வெற்றி
In கனடா April 18, 2019 8:18 am GMT 0 Comments 2842 by : Jeyachandran Vithushan

அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி அரசு தோற்கடிக்கப்பட்டு, ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை வெற்றியியைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து, அக்கட்சியின் தலைவரான ஜேசன் கெனி மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ளார்.
முற்போக்கு பழமைவாதக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி எனப்படும் இந்தக் கூட்டணி, கல்கரியில் பெருமளவான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி, தமது பாரம்பரிய கோட்டையான எட்மன்டனைத் தக்கவைத்துள்ள போதிலும், அதனைச் சுற்றியுள்ள பல நகரங்கள், கிராமங்களில் தனது பிடியை இழந்துள்ளது.
கல்கரி லூகீட் தொகுதியை வென்று முதல்வராகியுள்ள ஜேசன் கெனி, முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசில் அமைச்சராக அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.