மீண்டும் கடமைக்கு திரும்பினார் அமைச்சர் பவித்ரா
In இலங்கை February 23, 2021 2:09 pm GMT 0 Comments 1226 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது சேவையின் நிமித்தம் அமைச்சிற்கு சமுகமளித்துள்ளார்.
இதன்போது சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இதேவேளை தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்தியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.