அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு: ஆயுதம் தாங்கியவரால் பரபரப்பு – வொஷிங்டனில் பலத்த பாதுகாப்பு
In அமொிக்கா January 17, 2021 3:30 am GMT 0 Comments 1352 by : Dhackshala

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வொஷிங்டனுக்குள் நுழைய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், சோதனை செய்ததில் அவரிடம் கைத்துப்பாக்கி, 500 தோட்டாக்கள், ஷாட்கன் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆலன் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வொஷிங்டன் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.