ஒப்பந்தமற்ற பிரெக்சிற் அச்சுறுத்தல் அரசாங்கத்தின் ‘அரசியல் புரளி’ – சேர் கீர் ஸ்டாமெர்
In இங்கிலாந்து November 11, 2018 7:45 am GMT 0 Comments 1398 by : Varshini

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இன்றி வெளியேறவேண்டி ஏற்படுமென பிரித்தானியா அச்சுறுத்துவதானது, அரசியல் புரளி என்று தொழிற்கட்சியின் நிழல் பிரெக்சிற் செயலாளர் சேர் கீர் ஸ்டாமெர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்தின் பிரெக்சிற் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மோசமான ஒரு உடன்பாட்டை ஏற்கவேண்டிய அவசியம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுவதாக டவுனிங் ஸ்ரீட் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய வெளியேறுவதற்கு இன்னும் 4 மாதங்களே எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.