தற்கொலை தாக்குதலிலும் அந்தோனியாரின் மகிமை வெளிப்பட்டது!
In ஆசிரியர் தெரிவு April 28, 2019 3:52 pm GMT 0 Comments 9073 by : Jeyachandran Vithushan
தற்கொலை தாக்குதலில் அற்புதமான முறையில் அந்தோனியார் திருச்சுரூபம் எந்தவித சேதமும் இன்றி காணப்படுவதாக அருட்தந்தை ஜோய் அரியரட்னம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்ட கொச்சிக்கடை அந்தோனியர் ஆலயத்தின் நிலை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) எமது ஆதவன் செய்தி சேவை ஆராய்ந்தது. இதன்போது கருத்து தெரிவித்த போதே அருட்தந்தை இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது.
இந்த தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும் தேவாலய செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.