தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்
In இங்கிலாந்து November 21, 2019 3:07 pm GMT 0 Comments 1644 by : shiyani

அரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை தடை செய்யவுள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத்தேர்தலின்போது அதன் விளம்பரக் கொள்கைகள் குறித்து பெருகிய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் புதிய கொள்கை ஒரு வாரத்திற்குள் பிரித்தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என கூகிள் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இல்லாத போதிலும், அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மக்களை குறிவைக்கும் விளம்பரங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் சட்டவிரோதமானதாகும்.
கூகிளின் புதிய விதிகளின் கீழ், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது வாக்குச்சீட்டு நடவடிக்கைகளைக் குறிக்கும் விளம்பரங்கள், தரவு மூலங்களை இணைத்து தனிப்பட்ட பயனர்களைக் குறிவைக்கும் கூகிளின் சக்திவாய்ந்த சில கருவிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும்.
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரித்தானியப் பொதுத்தேர்தலுக்கும் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கும் முன்னதாக அரசியல் விளம்பரங்களுக்கு ஏற்கனவே ருவிற்றர் நிறுவனம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.