வர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும்! – கனடாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை
In கனடா August 12, 2018 10:54 am GMT 0 Comments 1620 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால், கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கும் மேலும் வரியினை விதிக்க வேண்டிய சூழல் உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மெக்சிக்கோவுடன் வர்த்தக இணக்கப்பாடு இலகுவாக எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் ஏராளமான பயன்களை அடைய முடியும் என, அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையிலேயே , கனடாவிற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கனடாவின் வரிகளும், வர்த்தக தடைகளும் மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனால் கனடா கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கனடாவுடன் இந்த இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் கார்களுக்கு வரி விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Deal with Mexico is coming along nicely. Autoworkers and farmers must be taken care of or there will be no deal. New President of Mexico has been an absolute gentleman. Canada must wait. Their Tariffs and Trade Barriers are far too high. Will tax cars if we can’t make a deal!
— Donald J. Trump (@realDonaldTrump) August 10, 2018
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.