Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாஸ்க் போடுவது எப்படி?

In
Updated: 09:36 GMT, Nov 11, 2015 | Published: 09:16 GMT, Nov 11, 2015 |
0 Comments
1401
This post was written by :

அழகு நிலையங்களில் செய்பவர்கள் முகத்தை கிளென்சிங் பாலையும், வீட்டில் செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது காய்ச்சாத பாலையும் பஞ்சில் தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்யவும். கண் அடியில், வாய்பகுதியைச் சுற்றி மாஸ்க் போடுவதை தவிர்க்கவும்.

மாஸ்க் போட்டவர்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும். ஆட, அசைய கூடாது. அப்படிச் செய்தால் முகம் விர்ரென்று பிடித்து சருமம் பாதிக்கப்படும். மற்றவர்களுடன் பேசக்கூடாது.

 மாஸ்க்கை துடைக்கும்போது வெதுவெதுப்பான நீரிலோ அல்லது  துணியில் ஐஸ்  வைத்தோ துடைக்கவேண்டும்.

வீட்டிலேயே செய்யும் பேஸ்மாஸ்க்:

பிரட் மாஸ்க்: ஒரு பாண் துண்டினை எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்புன் தேன் கலந்து அரை மணிநேரம் ஊற வைத்து முகம் முழுவதும் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தில் ஊறிய பாணை மசாஜ் பண்ணி தேய்த்து எடுக்கவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரமத்திற்கு நல்ல நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும்.

பாதாம் மாஸ்க்: மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து ஒரு டீஸ்பூனும் பாலோடு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும். கரும்புள்ளிகள் மறையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg