Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலைஞர் ஏழுமலைப்பிள்ளையின் வீரகாவியம் நாடக நூல் வெளியீடு

In
Updated: 10:42 GMT, Nov 21, 2015 | Published: 10:42 GMT, Nov 21, 2015 |
0 Comments
1570
This post was written by : Risha

கலைஞர் ஏழுமலைப்பிள்ளையின் வீரகாவியம் நாடக நூல் வெளியீடு நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

காவேரி பதிப்பகத்தின் வெளியீடான வீரகாவியம் நூல், ஏழுமலைப்பிள்ளையின் இரண்டாவது நாடக நூலாகும். இவரின் முதற் நாடக நூலான மகுடபங்கத்திற்கு வட மாகாணத்தில் சிறந்த நூலுக்கான 2015 முதலமைச்சர் விருதும், அரச இலக்கிய விழாவில் சிறந்த மூன்று நூல்களில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த நாடக நடிகனான ஏழுமலைப்பிள்ளை தென்னிந்திய சினிமா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் ரஜனியுடன் தீ படத்தில் நடித்த இவர் கடந்த மாதம் நடிகர் கமலஹாசனின் திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கின்றார்.

இவரின் இரண்டாவது நாடக நூல் வெளியீடானது கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் காவேரி பதிப்பகத்தின் தலைவர் அருட்தந்தை யோசுவா, கிளிநொச்சி மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் அருட்சந்திரன், கரைச்சி கலாச்சார உத்தியோகத்தர் றஜீவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

IMG_6272 IMG_6310

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg