Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தயிர் சிக்கன்

In
Updated: 05:35 GMT, Nov 28, 2015 | Published: 05:35 GMT, Nov 28, 2015 |
0 Comments
1446
This post was written by : Anojkiyan

சுவையான எளிதில் செய்யக்கூடிய தயிர் சிக்கன் இது. இதனை சாலட்டுடன், சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க…..

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/4 கிலோ
தயிர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைத்துக்கொள்ள…

பூண்டு – 6 பெரிய பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 10
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  •  சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  •  அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.
  •  சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
  •  கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.
  •  சுமார் 10 – 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்­ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
  •  கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவிடவும்.

குறிப்பு

  •  மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
  •  தயிரினை இஞ்சி, பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 Sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.
  •  தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.
  •  இந்த சிக்கனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg