Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக செல்வந்தர்களில் 3ஆவது வருடமாகவும் பில்கேட்ஸ் முதலிடத்தில்

In வணிகம்
Updated: 09:49 GMT, Mar 7, 2016 | Published: 09:49 GMT, Mar 7, 2016 |
0 Comments
1180
This post was written by :

2016ம் ஆண்டுக்கான உலகப் செல்வந்தர்களின் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் இவர் தொடர்ந்து 3வது ஆண்டாகவும் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இத்தகவல் குறிப்பிடப்படடுள்ளது.

குறித்த பத்திரிகை வெளியிட்டுள்ள 2016ம் ஆண்டுக்கான உலகப் செல்வந்தர்கள் பட்டியலில், 1,810 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு இப்பட்டியலில் 1,826 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இதில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 75 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்தை தன்வசம் வைத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து அப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் அமென்சியோ ஒர்டேகோ உள்ளார். 3ஆவது இடத்தை வொரன் பவட் பிடித்துள்ளனர். கடந்த வருடம் 16 ஆவது இடத்தில் இருந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பேர்க் இந்த வருடம் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg