Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் : உலக வங்கி தகவல்

In வணிகம்
Updated: 06:04 GMT, Apr 18, 2016 | Published: 06:04 GMT, Apr 18, 2016 |
0 Comments
1182
icon_com
This post was written by : Shailu
World Bank

இந்த வருடத்தை விட அடுத்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் பிற்போடப்பட்டவை மற்றும பொது மக்களின் முதலீடு காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னர், ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நாணய வைப்பு காரணமாக சர்வதேசம் எதிர்நோக்கிய சவால்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிப்படைந்தது.

அதனால், உயர்தன்மையிலான கடன், குறைந்த அளவிலான அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அதிக பணவீக்கம் என்பனவற்றை இலங்கை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார துறையின் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறுகையில்,

‘இடை நிறுத்தப்பட்டிருந்த துறைமுக நகர திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாரிய திட்டம் 2015ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. உரிய முறையிலான அனுமதி பெறப்படாத நிலையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டமையினாலேயே திட்டம் பிற்போடப்பட்டது.

தற்போது, இந்த திட்டம் குறித்த சகல ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டுள்ளமை காரணமாக, இந்த திட்டத்தினை மேலும் காலதாமதம் இன்றி மேற்கொள்ள முடியும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg