Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வற்வரியில் மீண்டும் மாற்றம்: சிகரட், மதுபானத்திற்கும் வற் வரி

In வணிகம்
Updated: 06:05 GMT, Jun 17, 2016 | Published: 06:04 GMT, Jun 17, 2016 |
0 Comments
1166
icon_com
This post was written by : Anojkiyan
VAT (1)

மருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு மற்றும் விமான டிக்கட் மீது விதிக்கப்பட்ட வற் வரியை நீக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் கூடிய பொருளாதாரம் தொடர்பிலான குழுவின் கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இது தவிர சிகரட், பீடி மற்றும் மதுபானத்திற்கு வற் வரி விதிக்கவும் இங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

11 வீதமாக இருந்த வற் வரி அண்மையில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரி அதிகரிக்கப்படாத போதும் பொதுமக்களுக்கு பாதிப்புள்ள சில பொருட்கள், சேவைகள் மீது வற் வரி அதிகரிக்கப்பட்டது தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

வற் வரி உயர்வின் போது சிகரட், பீடி மற்றும் மதுபானம் மீது இந்த வரி விதிக்கப்படவில்லை வேறு வரிகளே விதிக்கப்பட்டுள்ளன. மது, புகை என்பவற்றுக்கு ஊக்குவிப்பு வழங்குவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவின் பிரகாரம் இவற்றின் மீதான வற் வரியை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு என்பவற்றுக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டது தொடர்பில் விமர்சனம் காணப்படுகிறது. நோயாளர்களின் நலன் கருதி இவற்றிற்கு அதிகரிக்கப்பட்ட வற் வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணங்களும் வற் வரி அதிகரிப்பால் உயர்ந்துள்ளன.

இதனால் மத்திய கிழக்கிற்கும் வேறுநாடுகளுக்கும் தொழில் நிமித்தமும் வேறு தேவைகளுக்காகவும் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை படி இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணத்திற்கான வற் வரியை நீக்க பொருளாதாரம் தொடர்பான குழு முடிவுசெய்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg