Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளம் – சிலாபம் மானாவரி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று

In ஆன்மீகம்
Updated: 06:13 GMT, Jun 19, 2016 | Published: 06:12 GMT, Jun 19, 2016 |
0 Comments
1166
icon_com
This post was written by : Shailu
image-18-06-16-04-35-1

புத்தளம் மாவட்டம் சிலாபம் மானாவரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி ஆலய தீர்த்தோற்சவம், இன்று (ஞாயிற்றுக்கிழமை)  அருகிலுள்ள தீர்த்தக்கரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில்,  இவ்வாலயத்தில் இரதோற்சவம் நேற்று (சனிக்கிழமை) மிக விமர்சையாக நடைபெற்ற நிலையில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நன்பகல் 12 மணிக்கு தீர்த்தோற்சவம்  இடம்பெறவுள்ளது.

இராவணன் சீதையை லங்காபுரிக்கு கவர்ந்து கொண்டு வந்த பின்னர், சீதையை மீட்பதற்காக ஸ்ரீ ராமருக்கும் இராவணனுக்கும் இடம்பெற்ற சம்ஹாரத்தின் போது, இராவணனால் பிரம்மஹஷ்தி தோஷம் ஏவப்பட்டது.

அந்த பிரம்மஹஷ்தி தோஷம் நீங்குவதற்கு ஸ்ரீ இராம பிரான் மணலை வாரிப் பிடித்து பூஜை செய்து வணங்கப்பட்ட லிங்கம் ஸ்ரீ இராமலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது. இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

இந்த லிங்கமத்தில் ஒன்று இந்தியாவில் இராமேஸ்வரத்திலும் மற்றையது இலங்கையிலுள்ள மானாவரியிலும் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

image-18-06-16-04-35-2
image-18-06-16-04-35
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg