Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு 10 பேரின் பெயர்கள் பரிசீலிப்பு

In வணிகம்
Updated: 14:00 GMT, Jun 20, 2016 | Published: 13:59 GMT, Jun 20, 2016 |
0 Comments
1215
icon_com
This post was written by :
Reserve Bank of India

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு சுமார் 10 பேரின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அரசு பரிசீலித்து வரும் பட்டியலில் முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய், பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் இடம் பெற்றுள்ளனர். அடுத்ததாக, தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு மற்றும் பொருளாதார விவகாரச் செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியவர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரபல வங்கியாளர் கே.வி. காமத், செபி தலைவர் யு.கே. சின்ஹா, பிரபல பொருளாதார நிபுணர் ஆர். வைத்தியநாதன், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் உர்ஜித் படேல் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையிலே, அவருக்கு பதிலாக தற்பொழுது இவர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg