Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேவையற்ற ரோமங்களை நீக்க இயற்கை வழிமுறைகள்!

In
Updated: 15:31 GMT, May 5, 2018 | Published: 09:41 GMT, May 4, 2018 |
0 Comments
1442
This post was written by : Anojkiyan

முகத்தில் வளரும் முடியைப் போக்க : சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி அதிகம் வளரும். இதனைப் போக்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கலவை முகத்தில் மட்டுமின்றி, உடலின் மற்ற பகுதிகளில் வளரும் முறையைப் போக்கவும் உதவும். ஆனால் இந்த கலவையை மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் பயன்படுத்தக்கூடாது.

தேவையான பொருட்கள்: சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை : முதலில் ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முடி வளரும் இடத்தில், முடி வளரும் திசையை நோக்கி தடவி, 15-20 நிமிடம் கழித்து, தண்ணீர் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சி குறைவதைக் காணலாம்.

கை, கால்களில் வளரும் முடியைப் போக்க : உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்க எலுமிச்சை, சர்க்கரை மற்றும் தேன் கலவை சிறந்ததாக இருக்கும். இந்த முறை ஒரு வேக் போன்று செயல்படும் மற்றும் இந்த முறையால் சிறிது வலியை உணர நேரிட்டாலும், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.

தேவையான பொருட்கள் : சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன், மைதா/சோள மாவு – 1-2 டீஸ்பூன், வேக்சிங் ஸ்ரிப் அல்லது ஒரு துண்டு துணி ஸ்படுலா அல்லது கத்தி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg