Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சதொச விற்பனை நிலையங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை

In வணிகம்
Updated: 12:51 GMT, Jul 13, 2016 | Published: 12:48 GMT, Jul 13, 2016 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan

நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை இன்னும் ஆறு மாதங்களில் கணனிமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் சதொச நிலையங்களின் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சதொச ஊழியர்கள் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கான விசேட செயலமர்வு இன்று (புதன்கிழமை) இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சிங்கப்பூரில் நடைமுறையில் இருக்கும் ‘பெயார் பிரைஸ் எக்ஸ்ட்ரா’வைப் போன்று நமது நாட்டிலும் புகையிரத நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ‘மினி மார்கட்’களை அமைக்கவுள்ளோம். அதன் மூலம் சாதாரண விலைக்கு பொருட்களை வழங்க முடியும்.

அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களையும் இந்த நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்படும். இதன் மூலம் நுகர்வோரின் சிரமங்களை குறைக்க முடியுமென நம்புகின்றேன்.

சதொச பணியாளர்கள் மிகவும் நேர்மையுடன் செயற்பட வேண்டும். தாங்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்திற்கு ஏற்றவகையில் மனச்சாட்சியுடன் பணியாற்ற வேண்டும்.

பாரிய நஷ்டத்தில் இயங்கிய சதொச நிறுவனத்தை படிப்படியாக நஷ்டத்திலிருந்து விடுவித்து தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இவ்வாறான முயற்சிக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg