Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீட்ரூட் பொரியல்

In
Updated: 07:32 GMT, Jul 16, 2016 | Published: 07:32 GMT, Jul 16, 2016 |
0 Comments
1234
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பீட்ரூட்டை சுத்தமாக நீரில் கழுவி, தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு குக்கரில் போட்டு, பீட்ரூட் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg