Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுறாபுட்டு

In
Updated: 03:49 GMT, Jul 17, 2016 | Published: 03:47 GMT, Jul 17, 2016 |
0 Comments
1240
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி + 1\4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 15 பல்
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை – 5 இலை
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – 1 துண்டு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சுறாமீனை சுத்தம் செய்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுறாமீனை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். சுறாமீன் நன்றாக வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிட்டு, பிறகு அதனுடைய தோலினை நீக்கிவிட்டு மீனை உதிர்த்து கொள்ளவும்.

பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முதலியவற்றை பொடியாக வெட்டி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து பின் பூண்டு போட்டு நன்றாக 2 நிமிடம் வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன்பின், உதிர்த்து வைத்துள்ள சுறாமீன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியில் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். தற்போது சுவையான சுறாபுட்டு தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg