Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சித்திரவதைகளை தடுப்பது குறித்து இலங்கை கூடுதலான கவனஞ்செலுத்த வேண்டும்: ஐ.நா.

In இலங்கை
Updated: 06:33 GMT, Nov 27, 2016 | Published: 06:03 GMT, Nov 27, 2016 |
0 Comments
1309
This post was written by : Varshini

கடந்த காலத்தைப் போல நல்லாட்சியிலும் சித்திரவதைகளும் வெள்ளைவான் கடத்தல்களும் தொடர்வதாக தெரிவித்துள்ள ஐ.நா, இலங்கை அரசாங்கம் இவ்விடயம் குறித்து கூடுதலான கவனஞ்செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அடுத்த வருடம் ஓய்வுபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான ஐ.நா.வின் அழுத்தம் இல்லாமல் போகலாமென பல்வேறு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும், ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு யார் வந்தாலும் இலங்கை விடயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமென பர்ஹான் ஹக் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg