Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளரை தெரிவு செய்யும் இறுதி சந்தர்ப்பம் இன்று

In ஐரோப்பா
Updated: 08:00 GMT, Nov 27, 2016 | Published: 08:00 GMT, Nov 27, 2016 |
0 Comments
1289
This post was written by : Sambavi

அடுத்த வருடம் நடைபெற உள்ள பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் மத்திய வலதுசாரி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இனங்காண்பதற்கான வாக்களிப்பின் பெறுபேறுகள் முன்னாள் பிரதமர் பிரான்கொயிஸ் ஃபிலோனிற்கே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ஒன்றான பிரான்ஸில் வலதுசாரி கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்வதற்கான இரண்டாவதும் இறுதியுமான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பில் 63 வயாதான ஃபிலோன் 71 வயதான அலைன் ஜுப்பேவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

ஆதற்மைய அன்றைய வாக்களிப்பின் பிரகாரம் ஃபலோன் 44.1 சதவீத வாக்குகளையும் அலைன் 28.5சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறுகின்றன.

இதிலும் ஃபலோன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் அதன் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் வலதுசாரி கட்சி சார்பில் களமிறங்கும் வாய்ப்பு அவருக்கே அதிகம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg