Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறையை தகர்த்து காலிஸ்தான் தீவிரவாத தலைவர் மீட்பு!

In இந்தியா
Updated: 09:37 GMT, Nov 27, 2016 | Published: 09:37 GMT, Nov 27, 2016 |
0 Comments
1596
This post was written by : Shailu

பஞ்சாப் மாநிலம் நபாவில் உள்ள மத்திய சிறையில் ஆயுதம் தாங்கிய குமபல் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடி தாக்குதல் நடத்தி, சிறை வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டுவை (Harminder Singh Mintoo ) மீட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 3வாகனங்களில், காவல்துறை சீருடை அணிந்து, ஆயுதம் தாங்கிய வருகை தந்த 10 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று குறித்த சிறைச்சாலை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

அவர்கள் முதலில் கையெறி குண்டுகளை வீசியும் பின்னர் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, சிறை வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு உட்பட 5 கூலிப்படை தலைவர்களையும் மீட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த தாக்குதல் மற்றும் தப்பித்தல் சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் பாதுகாப்புக்களை அதிகரித்துள்ளதோடு, வாகனப் போக்குவரத்து சோதனையும் தீவிரப்படுத்தப்படுள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் மின்டூ கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி;. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg