Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் கடலில் மூழ்கிய இரண்டாவது மாணவனின் சடலமும் மீட்பு

In இலங்கை
Updated: 10:15 GMT, Nov 28, 2016 | Published: 04:24 GMT, Nov 28, 2016 |
0 Comments
1453
This post was written by : Varshini

மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது – 17) என்பரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய மற்றொரு மாணவனான ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது – 17) எனும் மாணவனின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்களின் பின்னர் சிவதர்ஷனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டிருந்த சேகுதாவூத் அக்ரம் (வயது – 17) என்ற பிறிதொரு மாணவன் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg