Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா கொலை சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

In இலங்கை
Updated: 05:41 GMT, Nov 28, 2016 | Published: 05:36 GMT, Nov 28, 2016 |
0 Comments
1232
This post was written by : Varshini

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் இவ் உத்தரவை பிறப்பித்தார். சந்தேகபர்கள் 12 பேரும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், முதல் 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பான விசாரணை அண்மையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துரிதப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg