Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: முதல் முறையாக வாகை சூடியது அர்ஜென்டினா

In டெனிஸ்
Updated: 05:57 GMT, Nov 28, 2016 | Published: 05:57 GMT, Nov 28, 2016 |
0 Comments
1193
This post was written by : Anojkiyan

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் அர்ஜென்டினா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

குரோஷியாவில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிபோட்டியில், குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.

இரண்டு ஒற்றையர், ஒரு இரட்டையர் பிரிவு போட்டியின் முடிவில் அர்ஜென்டினா அணி 1–2 என பின்தங்கி இருந்தது. மாற்று ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ 6–7, 2–6, 7–5, 6–4, 6–3 என குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தினார்.

இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினாவின் பெடரிகோ டெல்போனிஸ் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சை தோற்கடித்தார். ஐந்து போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா அணி 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக டேவிஸ் கோப்பை வென்றது.

இதற்கு முன், நான்கு முறை (1981, 2006, 2008, 2011) இறுதிபோட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. இத்தொடரில் அமெரிக்க அணி அதிகபட்சமாக 32 முறை கோப்பை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg